கொரோனா இரண்டாம் அலை தற்பொழுது தீவிரமடைந்துள்ளதால் அனைத்துவிதமான தொழில்களும் தற்பொழுது மூடப்பட்டுள்ளதால் பலரும் தற்போது நெருக்கடியை சந்தித்து உள்ளன.
அதில் ஒன்றாக சினிமா துறையும் பார்க்கப்படுகிறது தற்போது மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் தொடங்கி சாதாரண சினிமா தொழிலாளர்கள் வரை பலரும் நெருக்கடியை சந்தித்துள்ளன இப்படியிருக்க பெப்சி ஊழியர்களுக்கு உதவும் வகையில் தல அஜித் 10 லட்சம் கொடுத்துள்ளது தற்போது பிரபலங்கள் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் என அனைவரையும் சந்தோஷப்படுத்தி உள்ளது.
இச்செய்தியை பெப்சி யூனியன் தலைவர் ஆர் கே செல்வமணி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் அவர்கள் பெப்ஸி யூனியன் தொழிலாளர்களுக்கு 10 லட்சம் கொடுத்து உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்கு முன்பாகவே அஜித் முதலமைச்சர் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா நிதி உதவிக்காக அஜித் 25 லட்சம் வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூழ்நிலையை அறிந்து தானாகவே முன்வந்து அஜித் கொடுத்துள்ளதால் அவரை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.மேலும் இவரை போன்று மற்றவர்களும் தானாக முன்வந்து இந்த செயலில் ஈடுபட்டு நெருக்கடியில் உள்ள தொழிலாளர்களையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.