தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக பார்க்கப்படுபவர் அஜித். இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பேங்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக காட்டியது அதனால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க நடிகர் அஜித்குமார் தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. வெகு விரைவிலேயே அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு ஷூட்டிங்கை தொடங்கப்பட உள்ளதாம்..
இனி மேல் ஷூட்டிங்கை இரவு / பகல் என்று கூட பார்க்காமல் எடுத்தாலும் தீபாவளிக்கு AK 62 படம் வெளிவருவது கஷ்டம் எனவே இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவரவே ஏ கே 62 படத்திற்கு வாய்ப்பு இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.. ஒரு வேலை அடுத்த பொங்கலுக்கு ak 62 படம் வெளியாகும்..
பட்சத்தில் சூர்யா 42 வது திரைப்படத்துடன் மோத அதிக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் கூறப்படுகிறது. சூர்யா 42 திரைப்படம் முழுக்க முழுக்க சங்க காலத்து படமாக உருவாகி வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது இந்த படத்துடன் அஜித் படம் மோத அதிக வாய்ப்புகளும் இருக்கிறது… இது நடந்தால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு ட்ரீட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.
நடிகர் அஜித் சமீப காலமாக ரஜினி, கமல், விஜய் ஆகியோருடன் எதிர்த்து வெற்றி கண்ட நிலையில் சூர்யாவுடன் மோத உள்ளதால் இரண்டு படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகிறது பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..