வாரிசு படத்தை எதிர்த்து மோதும் அஜித்..! உறுதிப்படுத்திய தயாரிப்பாளர்.

ajith-and-vijay
ajith-and-vijay

தமிழ் சினிமா உலகில் இரு தூண்களாக கருதப்படுபவர்கள் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். இது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதினால் இன்னும் உற்சாகம் அடைவார்கள்..

ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதவில்லை என்பது தான் உண்மை.. இதனால் இனி இது நடக்குமோ நடக்காதோ என இருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது அதாவது அஜித் விஜய் இருவரும் எட்டு வருடங்கள் கழித்து தற்பொழுது பொங்கலுக்கு மோத இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித் தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அந்த படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது. அதேபோல விஜய்யும் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகி வருகிறது இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா, குஷ்பூ, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே பட குழு திட்டவட்டமாக அறிவித்த நிலையில் அஜித்தின் படமும் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ்..

தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. துணிவு கிராண்ட் வேர்ல்ட் ரிலீஸ் பொங்கல் 2023 என குறிப்பிட்டுள்ளார் இதனால் அஜித் விஜய் மோதிக்கொள்வது உறுதியென பலரும் சொல்லி வருகின்றனர் ரசிகர்களுக்கு தற்போது இந்த செய்தி கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது..’