நடிகர் அஜித் அண்மை காலமாக அதிகம் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார் அதுவும் ஒரு படம் மட்டுமல்ல தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் இணைவது வழக்கம் அப்படித்தான் இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து வேதாளம், விசுவாசம், விவேகம், வீரம் போன்ற நான்கு சிறப்பான படங்களை கொடுத்தார்.
இந்த நான்கு படங்களின் கதையும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இதைத்தொடர்ந்து இயக்குனர் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை என்ற இரு படங்களை கொடுத்தார் இதில் நேர்கொண்ட பார்வை நல்ல ஹிட். அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் இணைந்த வலிமை திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்று கொடுத்தது.
இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாகவும் இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் பிரம்மாண்ட பொருட் செளவில் தயாரித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து முடிந்துள்ளது இந்த படத்தில் அஜித் உடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, அஜய், ஜான் கொக்கின் போன்ற முக்கிய நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
படத்தின் டப்பிங் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் துணிவு படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் பேட்டி ஒன்றில் பேசிய செய்தி ஊடகங்களில் வெளியாகி உள்ளது. “ஒருவர் தவறு செய்தால் அதைச் சுட்டிக் காட்டுங்கள் அதற்காக ஒட்டுமொத்த தொழிலையே பொதுமைப்படுத்தாதீர்கள்”.
அஜித் சாருக்கு கூட தனிப்பட்ட ஒருவரை தாக்கி பேசுவது பிடிக்காது. அவரைப் பொறுத்தவரை படத்தின் வெற்றி தோல்வி முக்கியமில்லை படக்குழுவினர் நேர்மையுடன் செயல்பட வேண்டும் அனைவரையும் மதிக்க வேண்டும் வெற்றி வரும் போகும் அதற்காக மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என அஜித் கூறுவதாக ஹெச் வினோத் தெரிவித்துள்ளார்.