Ajith : கோடான கோடி ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கவர்ந்திழுத்துள்ளவர் அஜித் குமார் இவர் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்தில் நடிக்கயுள்ளார். படத்தின் ஷூட்டிங் அபுதாபி, துபாய் போன்ற இடங்களில் நடைபெற இருக்கிறது.
அஜித்தும் துபாயில் ஏற்கனவே வீடு வாங்கி வைத்திருப்பதால் அங்கு தங்கி படப்பிடிப்பை முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹிமா குரேஷி, த்ரிஷா போன்றவர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் முரளி அப்பாஸ் அஜித் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் அவர் சொன்னது…
சினிமாவிற்குள் புதிதாக வந்த பிறகு மேக்கப் எல்லாம் போட மாட்டாராம் அஜித் ஷூட்டிங் வந்ததும் வெண்ணீருதான் வாங்குவாராம் அதை வைத்து தன் முகத்தை கழுவி விட்டு ஷாட்டுக்கு ரெடியாகுவாராம் சிட்டிசன் படத்திற்காக தான் முதன்முதலில் மேக்கப் போட்டாராம்.
மேலும் உணவுகளை விரும்பி சாப்பிடுவாராம் அஜித் எங்கு போனாலும் தனக்கு பிடித்தமான உணவுகளை ஹோட்டலில் இருந்து வரவழைத்து சாப்பிடுவாராம் யாரை பற்றியும் தேவையில்லாமல் பேச மாட்டாராம் ரசிகர்களை சந்திக்க கூடாது என்பது அவரது எண்ணம் இல்லை..
அதனால் வரும் அசௌகாரியங்களை ஏன் சந்திக்க வேண்டும் என்று நினைப்பாராம். மேலும் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களிடம் கதையை கூட ஒழுங்காக கேட்க மாட்டாராம் ஏன் கேட்கவில்லை என்று கேட்டால் அவர்களின் படம் கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டுமென இயக்குனர்கள் தயாரிப்பாளரோ நினைத்து தானே செய்கிறார்கள்.
அப்படி இருக்க தேவையில்லாத கதையை சொல்லவே மாட்டார்கள் என கூறிவிட்டாராம் இதைப்பற்றி இதைப் பற்றி பேசிய முரளி அப்பாஸ் எப்படி தான் இப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை ஒரு வேலை கடவுள் பக்தியாக கூட இருக்கலாம் அல்லது தன்னம்பிக்கையாக கூட இருக்கலாம் என கூறினார்.