நடிகர் அஜித்குமாருக்கு உடம்பில் பல ஆபரேஷங்களை செய்து நடக்கவே முடியவில்லை என்றாலும் தனது ரசிகர்களுக்காக வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்துகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 230 கோடி வெற்றி கண்டது.
அதனை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க மகிழ் திருமேனியுடன் கூட்டணி அமைத்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்த படத்திற்கான சூட்டிங் வருகின்ற அடுத்த வாரம் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித் அடுத்தடுத்த படத்திற்கு இப்பவே 4 சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு டிக்கடித்துள்ளார் என கூறப்படுகிறது அவர்களைப் பற்றி விலாவாரியாக பார்ப்போம்..
விக்ரம் வேதா படத்தை எடுத்த புஷ்கர் – காயத்ரியிடம் அஜித் கதை கேட்டுள்ளார் அந்தக் கதை ஆக்சன் நிறைந்த ஒரு டான் சம்பந்தப்பட்ட கதை என கூறப்படுகிறது. தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வரும் கார்த்திக் நரேன் அஜித்திடம் ஒரு கதை கூறியிருக்கிறார் அந்த கதை முழுக்க முழுக்க திரில்லர் ஜானரில் இருக்கும் கதையாக இருக்கிறதாம்..
இவர்களைத் தொடர்ந்து அஜித்துடன் பல்வேறு படம் பண்ணிய விஷ்ணுவர்தன் மீண்டும் அஜித்தை சந்தித்து ஆக்சன் திரில்லர் கதை ஒன்றைக் கூறி இருக்கிறார் அது அஜித்திற்கு ரொம்பவே பிடித்திருக்கிறதாம் அதற்கும் ஓகே சொல்லி உள்ளார் கடைசியாக மாயா பட இயக்குனர் அஸ்வின் அஜித்திடம் ஒரு கதையை கேட்டு இருக்கிறாராம்.. நான்கு இயக்குனர் சொன்ன கதைகளுமே அஜித்திற்கு ரொம்ப பிடித்துள்ளதாம்.
ஆனால் ஏகே 62 படத்தை தொடர்ந்து யாரை செலக்ட் செய்ய போகிறார் என்பது தான் தற்பொழுது பெரும் குழப்பத்தில் இருக்கிறது. விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் முதலில் ஏகே 62 முடியட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் என கூறி கமெண்ட் அடித்து வருகிறனர்.