நடிப்பிற்கு பெயர்ப்போன சிவாஜி கணேசன். 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான்.. ஒவ்வொரு படத்திலேயும் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டன. இதனால் ரசிகர்கள் இவருக்கு பல புனைபெயர்கள் வைத்தனர்.
அதில் ஒன்றாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எனவும் பலரும் அழைத்து வந்தனர். இப்படி படங்களில் வெற்றி நாயகனாக ஓடிய இவர் வாங்காத விருதுகளே கிடையாது. இப்படிப்பட்ட சிவாஜி கணேசன் படங்களில் நடிக்க அப்பொழுது இருக்கும் இளம் நடிகர்கள் அதிகம் ஆசை காட்டினர்.
ஆனால் ஒரு சிலருடன் மட்டும் தான் சிவாஜி கணேசன் இணைந்து நடித்தார் அந்த வகையில் ரஜினி, கமல், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார் ஆனால் அஜித்துடன் மட்டுமே நடித்ததே கிடையாது. ஆனால் ஒரே ஒரு தடவை மட்டும் சிவாஜி கணேசனும், அஜித்தும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அந்த வாய்ப்பையும் ஒரு கட்டத்தில் கைநழுவி போனது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ஏய், பகவதி போன்ற படங்களை இயக்கிய வெற்றி கண்ட இயக்குனர் வெங்கடேஷ் நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் பூவே பூச்சூடவா என்ற படத்தை இயக்க இருந்தார் இந்த படத்தில் விஷாலின் அண்ணன் ஹீரோவாக நடித்திருந்தார்.
அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் அஜித்தையும் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் கூட பிளான் போட்டு இருந்தனர் இயக்குனர் வெங்கடேஷ்.. வேறு ஒரு தயாரிப்பாளர் வெங்கடேஷ் இயக்க வாக்கு கொடுத்து விட்டாராம்.. அதனால் இந்த படத்தை இயக்க முடியாமல் போனதாக ஒரு பேட்டியில் கூறி இருந்தார் இதற்குப் பிறகு அஜித்தும், சிவாஜி கணேசனும் இணைய முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.