அஜித் மற்றும் எச் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சில்லா சில்லா என தொடங்கும் இந்த பாடல் வெளியாகி 30 நிமிடங்களில் பல சாதனைகளை படைத்து வருகிறது துணிவு பாடல்.
ஜிப்ரானிஷா இசையமைத்துள்ள இந்த பாடலை ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் பாடியுள்ளார். இந்தப் பாடல் இன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. துணிவு திரைப்படத்திலிருந்து வெறும் போஸ்டர்கள் வெளியாகி வெளியாகி வந்த நிலையில் அஜித் ரசிகர்கள் எப்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இறங்கி விளம்பரப்படுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து சில்லா சில்லா என தொடங்கும் இந்த பாடலை விரைவில் வெளியாகும் என பட குழு பல நாட்களாக இழுத்து அடித்து வந்தது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் இரண்டு நாட்களுக்கு முன்பு துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
அந்த வகையில் டிசம்பர் 9ஆம் தேதி ஆன இன்று அஜித்தின் துணிவு படத்தில் அமைந்துள்ள சில்லா சில்லா என தொடங்கும் பாடல் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த பாடல் வெளியாகி 30 நிமிடத்தில் 156k பார்வையாளர்களை கடந்து வருகிறது மேலும் 431k லைக்குகளை குவித்து வருகிறது.