சொந்தமாக தொழில் தொடங்கிய “அஜித்” – என்ன தெரியுமா.? கடைசியில் நடந்த ட்விஸ்ட்..?

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித்குமார் இவர் திரை உலகில் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் அண்மை வளமாக இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன அந்த வகையில் வலிமை படத்தின் வெற்றியை..

தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ஹச். வினோத்துடன் கைகோர்த்து அஜித்தின் நடிப்பு வரும் திரைப்படம் துணிவு இந்த படம் அஜித்திற்கு 61வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத், சென்னை மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது அண்மையில் தான் இந்த படத்தின் சூட்டிங் முற்றிலுமாக முடிவு பெற்றது.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சேனல் போஸ்டர் ஆகிய மட்டுமே வெளிவந்துள்ளன.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. நடிகர் அஜித்குமார் இப்பொழுது பேட்டி கொடுக்கவில்லை என்றாலும் ஆரம்ப காலகட்டத்தில் பல பேட்டிகள் கொடுத்துள்ளார் அதில் தனது வாழ்க்கை மற்றும் அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார் அப்படி ஒரு பேட்டி ஒன்றில் அவர் சொல்லி உள்ளது.

தான் சொந்தமாக ஈரோட்டில் Textile குறித்த பிசினஸ் தொடங்கியதாகவும் அப்பொழுது தனக்கு மாடலிங் மற்றும் மோட்டார் பைக் ரேஸ்ங்கில் ஆர்வம் இருந்தது பின்னர் பிசினஸில் நஷ்டம் ஏற்பட பிறகு மாடலிங் மற்றும் நடிப்பில் கவனம் செலுத்தினேன் என கூறியிருக்கிறார் இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.