படப்பிடிப்பு முடிந்த கையோடு பைக்கை உரும்ப விட்ட தல அஜித்..! இணையத்தில் தெறிக்கும் AK லேட்டஸ்ட் அப்டேட்..!

ajith
ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தல அஜித். இவர் பைக் ரேஸில் அதிக அளவு ஆர்வம் கொண்டவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் சரி பட விழாக்களிலும் சரி இதுவரை கலந்து கொண்டதே கிடையாது.

மேலும் இரண்டு நாட்கள் ஷூட்டிங் கிடையாது என்றால் அந்த இரண்டு நாட்களும் தல அஜித்தை பார்க்கவே முடியாது அந்த வகையில் தற்போது தல அஜித் அடிக்கடி பைக் ரேஸ் போன்றவற்றிற்கு வெளியே வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தல அஜித் சமீபத்தில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்து வெற்றி கண்டார் இதனைத் தொடர்ந்து அதே கூட்டணியுடன் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஹுமா குரோஷி கதாநாயகியாக நடித்து வருகிறார் மேலும் இத்திரைப்படம் வருகின்ற பொங்கல் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்

சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றது  அந்தவகையில் ரஷ்யாவில் உள்ள பைக் ரேசர்கள் பலருடன் தல அஜித் சுமார் 5000 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய உள்ளாராம். மேலும் வலிமை படப்பிடிப்பு முடிந்த கையோடு சுமார் 10 மாதங்களாக இந்தியா முழுவதும் தல அஜித் பைக்கில் சுற்றி வருவதாக தெரியவந்துள்ளது.

எப்பொழுதுமே பைபாஸில் மட்டும் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த  தல அஜித் தற்போது கரடுமுரடான இடங்களிலும் பைக் ஓட்ட ஆரம்பித்து விட்டாராம் இந்நிலையில் அவருடைய புகைப்படங்கள் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.