வலியை தாங்கி தாங்கி மறுத்து போனவர் அஜித் – சூட்டிங்கில் நடந்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த வினோத்.

ajith-and-vinoth
ajith-and-vinoth

ஹச் வினோத் உடன் அஜித் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து நடித்து வந்துள்ள திரைப்படம் வலிமை இந்த திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் போனி கபூர் தயாரித்துள்ளார் , ஒளிப்பதிவு நீரவ்ஷா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என ஒரு மிகப் பெரிய பட்டாளமே இந்த படத்தில் பணியாற்றி உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு உலக அளவில் இருந்து வருகிறது.

அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த திரைப்படம் நிச்சயம் வெளியாக இருக்கிறது இந்த படத்தில் வில்லன் கார்த்திகேயா, ஹூமா குரேஷி, யோகி பாபு, புகழ் மற்றும் பலர் நடித்து அசத்தி உள்ளனர் இந்த படத்தில் இருந்து இதுவரை பல்வேறு விதமான அப்டேட்டுகள் வெளிவந்துள்ளன ஒவ்வொன்றும் வியக்க வைக்கும் வகையில் இருந்து வந்துள்ளதால் ரசிகர்கள் படத்தை திரையரங்கில்  கொண்டாட இருக்கின்றனர்.

போஸ்ட் புரோமோஷன் வேலைகள் தற்போது வலிமை படத்தில் ஜோராக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன இது இப்படி இருக்க மறுபக்கம் இயக்குனர் வினோத் வலிமை படம் குறித்தும் அஜித் பற்றியும் சில சுவாரஸ்ய தகவல்களை பல்வேறு நாளிதழுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அப்படி ஒரு நாளிதழுக்கு பேட்டி அளித்தபோது அவர் ககூறுகையில் வலியை தாங்கக்கூடிய சக்தி அஜித்துக்கு அதிகமாக உள்ளது சுண்டுவிரலில் அடிபட்டால் கூட அதை அனைவரிடமும் சொல்லுவதோடு காலை தாங்கி தாங்கி நடப்போம் ஆனால் அஜித்தை பொறுத்தவரை அவருக்கு வலியை தாங்குவது பழகிவிட்டது முக்கியமாக அவர் நடித்த பைக் சேஸிங் காட்சிகளை படமாக்கும்போது பைக்கில் இருந்து கீழே விழுந்து அடிபட்டு விட்டது அதனால் அவருக்கு இரண்டு நாள் ஓய்வு கொடுத்து விடலாம் என்று தயாரிப்பாளர் கூறினார்.

ஆனால் அவரோ அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த அடிபட்ட காயத்துடன் மறுநாள் இரவு சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிட்டார் பைக் சேஸிங் காட்சிகள் என்பதால் 3 லேயர் உடைகளை அணிய வேண்டும் ஆனால் அடிபட்டு புண்ணாக இருக்கும் காலில் அதுபோன்ற உடைகளை அணிவது கடினம் என்ற போதும் அந்த உடைகளை அணிந்து கொண்டு மீண்டும் அவர் நடிக்க தயாரானார்.

உடம்பில் ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை வைத்து இருந்தாலும் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இந்த வலியையும் தாங்கிக் கொண்டு எங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

வலிமை படம் முழுக்க முழுக்க காவல்துறை சம்பந்தப்பட்ட படம் தான் இந்த படத்தில் இன்றைய குடும்பங்களும் இளைய சமுதாயத்தினருக்கும் ஒரு அழுத்தத்தில்  இருக்கின்றார்கள் அது என்ன காரணம் என்பது தான் இந்தப் படம் பேசுகிறது