“ஜனா” படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்த என்னை 15 வருடங்கள் கழித்து ஞாபகம் வைத்திருந்த அஜித் – பழைய நினைவுகளைப் பற்றிப் பேசிய வில்லன்.

ajith
ajith

அஜித் சினிமா உலகில் சைலண்டாக இருந்தாலும் மற்ற நடிகர்களை தனது சக நண்பர்களாகவும் அண்ணனாகவும் பார்த்து தான் பழகி வருகிறார். இதனால் தான் திரையுலகிலும் அதிக நடிகர், நடிகைகளை கவர்ந்து இழுத்து உள்ளார். மேலும் மற்ற நடிகர், நடிகைகளின் படம் நன்றாக இருந்தால் அதை பார்த்து விட்டு  அவர்களுக்கு வாழ்த்து சொல்வது அஜீத்தின் வழக்கம் அப்படித்தான் இதுவரை இருந்துள்ளார்.

இவர் தமிழை தாண்டி மற்ற நடிகர்களுடன் நல்ல பழக்கத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது சினிமாவில் ஒரு பக்கம் சூப்பராக நடித்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் மற்ற பிரபலங்களின் படங்களுக்கு சென்று அவர்களை வாழ்த்துவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் அண்மையில் அஜித் வலிமை படத்தை முடித்துவிட்டு மோகன்லால் நடித்து வந்த மரைக்கார் படத்தின் படப்பிடிப்பு ஷூட்டிங் திடீரென விசிட் அடித்துள்ளார்.

அப்பொழுது அங்கு மோகன்லால் மற்றும் மற்ற பிரபலங்களையும் சந்தித்தார். அப்போது அஜித்தின் பழைய படத்தில் நடித்த பிரபலத்தை பார்த்தார். பாபுராஜ் “ஜனா” படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டநேரம்  இவரும் பேசியுள்ளனர். அதை சமீபத்தில் பாபுராஜ் அஜித் குறித்து அவர் பேசியுள்ளார். நான் 15 வருடத்திற்கு முன் ஜனா என்கின்ற படத்தில் அஜித் சாருக்கு வில்லனாக ஒரு சிறிய ரோலில் நடித்து இருந்தேன்  அப்பொழுதே எங்களிடம் நன்றாக பழகுவார்

. யார் பெரியவர் சிறியவர் என பார்க்க மாட்டார் எல்லோரிடமும் அன்பாக பழக கூடியவர் . நடிக்கும் போது கேரவன் என்பதையெல்லாம் நான் பார்த்ததே கிடையாது ஆனால் அவரோ என்னை அழைத்துக்கொண்டு கேரவனில் உக்காரவைத்து அவரது சாப்பாட்டை எங்களுக்கு கொடுத்து அழகு பார்ப்பார். அந்த பழைய நினைவுகளை பதினைந்து வருடம் கழித்து இப்போது அவர் கை கொடுக்கும் போது எனக்கு தோன்றியது.

ajith and baburaj
ajith and baburaj

மேலும் என்னை பற்றி அவர் நீண்ட நேரம் விசாரித்தார் மேலும் எனது குடும்பத்தை பற்றியும் விசாரித்தார். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு என கூறினார் தற்பொழுது பாபுராஜ் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் விஷால் நடிப்பில் து.பா. சரவணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார்.