தமிழ் சினிமாவில் தான் இருக்கின்ற இடம் தெரியாமல் படங்களில் நடிப்பது ஓடிக் கொண்டே இருப்பவர் நடிகர் அஜித்குமார் இவர் சைலண்டாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் விண்ணை பிளக்க வைக்கும் அளவிற்கு அஜித்தின் படங்களை கொண்டாடி தீர்க்கின்றனர் அப்படி ரசிகர்கள் அஜித்தை பார்க்க கடந்த இரண்டு வருடங்களாக தவமிருந்து.
ஒரு வழியாக பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்கில் பார்த்து கண்டு களித்தனர் ரசிகர்கள் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் வெளியாகி தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று அசத்துகிறது மேலும் வசூலிலும் குறையாத அளவிற்கே அடித்து நொறுக்குகிறது.
இதனால் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், ரஜினி ஆகிய நடிகரின் படங்களின் வசூலை முந்தி முன்னேறிக் கொண்டே போகிறது முதல் நாள் மட்டுமே தமிழகத்தில் 36.17 கோடி வசூலித்த நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் அதிக வசூலைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
வலிமை திரைப்படம் தமிழ் சினிமாவையும் தாண்டி ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வசூல் ரீதியாக நன்றாகவே கல்லா கட்டி வருகிறது. இதுவரை அஜித்தின் வலிமை திரைப்படம் மூன்று நாள்களில் மட்டுமே 100 கோடியை அள்ளிய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் தமிழகத்தில் மட்டும் அஜித்தின் வலிமை திரைப்படம் மூன்று நாட்களில் மட்டுமே சுமார் பருவத்தி 62. 70 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் படத்திற்கான வரவேற்பு அதிகரித்து கொண்டே செல்கிறது சொல்லப்போனால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் இந்த படத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள் இதனால் நிச்சயம் எதிர்பார்க்காத ஒரு வசூலை திரைப்படம் படைக்கும் என தெரியவருகிறது.