சினிமாவுலகில் இருக்கும் நடிகர்கள் எப்பொழுதும் சினிமாவை பற்றி பேசுவதோடு மட்டும் அல்லாமல் அதில் முதலிடத்தை பிடிக்கவும் விரும்புபவர்கள் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆளாக இருப்பவர் தான் தல அஜித். இவர் சினிமாவையும் தாண்டி தன்னுடைய ஆசைகளை பூர்த்தி செய்யும் மனிதராக இதுவரை இருந்து வந்துள்ளார்.
சினிமாவில் ஒருமுகம் தொடர்ந்து வெற்றிக்கொடியை நாடினாலும் மறுபக்கம் தனது எண்ணங்களை செய்து வருகிறார் அந்த வகையில் ஒவ்வொரு படம் முடியும் போது சிறிது இடைவெளி விட்டு அந்த எண்ணங்களை பூர்த்தி செய்துகொள்வார். அதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சமைப்பது, ட்ரோன் இயக்குதல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல் போன்று வீட்டில் தனது திறமையைக் காட்டிய நிலையில் சமீபத்தில் துப்பாக்கி சுடுதலில் பல தங்கங்களை தட்டி தூக்கினார். மேலும் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகிறார் அஜித்.
வலிமை திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட் ஆகாமல் இவர் இந்தியாவை சுற்றி தற்போது பைக் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்திய எல்லையோர வாகா, அட்டாரி ஆகிய இடங்களில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வந்து ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்தது.
இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் கடந்த 10 மாதங்களாக மூன்று கட்டங்களாக இந்தியாவை முழுவதையும் பைக்கில் சுற்றி பார்த்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அந்த வகையில் இவர் வாகா, அட்டாரி, ஜெய்ப்பூர், லக்னோ, ஹைதராபாத் வாரணாசி ஆகிய இடங்களில் இவர் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து பார்த்தாலே தெரிகிறது இவர் முக்கால்வாசி இந்தியாவை சுற்றி பார்த்து உள்ளது நன்றாகவே தெரிகிறது . இந்த புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.