தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. அந்த திரைப்படத்தில் அவர் சிறப்பான முறையில் நடித்திருப்பார். அதன்பிறகு வினோத் இயக்கத்தில் ஏகே 61 என்ற திரைப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார்.
மேலும் இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த திரைப்படத்தின் வேலைகளை விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து செய்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எதனால் இப்படி பார்த்து பார்த்து செய்து வருகிறார் ஏன் என்றால் தல அஜித் அனைத்து இயக்குனரிடமும் கதையையும் வாங்கிவிடுகிறார்.
அந்த கதையில் அவருக்கு சில காட்சிகள் பிடிக்கவில்லை என்றால் உடனே மாற்றி விடுங்கள் என்று கூறினார். அதனால தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய கதையை மொத்தமாக மாற்றி விடுங்கள் என்று கூறியுள்ளார்.
தல அஜித்துக்கு அரசியல் சம்பந்தமான திரைப்படங்களில் நடிப்பதற்கு துளிகூட ஆர்வம் இருக்காது. இந்த கதையில் அரசியல் சம்பந்தமான சில காட்சிகள் வருவதால் இந்த கதையை ஒட்டுமொத்தமாக மாற்றி விடுங்கள் என்று விக்னேஷ் சிவனிடம் சொல்லிவிட்டார்.
அதிலும் அந்த கதைகள் அரசியல் சார்ந்த ஒருவரை பற்றி கூறுவது போல இருந்ததால் தல அஜித் அந்தக் கதையை கேட்டதும் செம கடுப்பாகி விட்டார். இது போல விஷயங்கள் என்னோட படத்தில் இருக்கக் கூடாது என்று உறுதியாக இருக்கிறேன் என்று விக்னேஷ் சிவன் இடம் கூறினார்.
மேலும் அந்த திரைப்படத்தின் கதையை மாற்றினால் மொத்த படமும் மாறிவிடும் என்று கூறினார் விக்னேஷ் சிவன். ஆனால் வேறு வழி இல்லாமல் கதையை மாற்றி வருகிறார். அதனாலதான் விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தை பார்த்து பார்த்து சரி செய்து வருகிறார்.