தமிழ் சினிமாவில் அதிக ஆண் ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்து வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித் குமார் இவர் தனது ரசிகர்களுக்காகவே தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது.
இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு முறை ஹச். வினோத்துடன் கைகோர்த்து தனது 61வது திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட இருக்கிறது. அஜித் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்கு முன்பாக ஐரோப்பிய நாடுகள் பக்கம் தனது பைக்கில் வலம் வந்தார்.
அதனை தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் கலந்து கொண்டு விருதுகளை அள்ளி உள்ளார். மேலும் ரசிகர்களை சந்தித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்திகள் பெரிய அளவில் வைரலாகி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்குமார் சினிமா உலகில் தற்பொழுது பேட்டி கொடுப்பதும் இல்லை மேடை நிகழ்ச்சிகளுக்கும் வராமல் இருந்து வருகிறார்.
ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அஜித் அப்படி கிடையாது பேட்டிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் அதிகமாக கலந்து கொண்டார் அப்படி ஒரு தடவை நான் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என கூறி உள்ளார் அதை தற்பொழுது நிறைவேற்றியும் காண்பித்துள்ளார். அஜித் அண்மைக்காலமாக துப்பாக்கி சுடுதலில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.
அதில் தற்பொழுது வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து உள்ளார் ஏற்கனவே துப்பாக்கி சுடுதலில் பல பதக்கங்களை வென்ற அஜித் தற்பொழுது திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் 5 பதக்கங்களை அள்ளி அசத்தி உள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் சொன்னதை செய்து காட்டக் கூடியவர் தான் அஜித் என சொல்லி இந்த செய்தியை இணையதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.