நடிகர் அஜித் நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் லண்டனில் இருந்து வெளியாக உள்ளதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஏனென்றால் ஏற்கனவே ஏகே 62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் தான் இயக்க இருந்தார் ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்திற்கு சுத்தமாக பிடிக்காததால் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார் என்று கூறபடுகிறது.
அதன் பிறகு ஏகே 62 திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது அந்த வகையில் தற்போது ஏகே 62 திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி தான் ஏகே 62 திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இது எதுவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி அவர்கள் திடீரென லண்டனுக்கு புறப்பட்டுச் சென்று இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் நடிகர் அஜித்குமாரும் லண்டனில் தான் இருக்கிறாராம் லைக்கா நிறுவனத்திடமும் அஜித்திடமும் பேச்சுவார்த்தை நடத்த தான் மகிழ் திருமேனி லண்டனுக்கு சென்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் நடிக்கும் ஏகே 62 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திலும் நடிகர் அஜித் அவர்கள் ஒரு கேங்க்ஷ்டர் கதாபாத்திரத்தில் தான் நடிக்க போகிறார் என்றும் கூறப்பட்டது இந்த நிலையில் புதிய சிக்கல்களால் ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் ஏகே 62 திரைப்படத்திற்காக மகிழ் திருமேனியை விரைவில் கதையை ரெடி பண்ண சொல்லி இருக்கிறாராம். அது மட்டுமில்லாமல் இந்த படத்திற்கு இசையமைக்க அனிருத் அவர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர் ஆனால் தற்போது அனிருத்தத்தையும் இந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த படம் எப்படி வரும் என்று எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகி விடும் என்று கூறப்படுகிறது அதுவும் லண்டனிலிருந்து வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.