ரஜினிக்கு நிகராக சம்பளம் வாங்கும் அஜித் – முதலிடத்தில் யார் தெரியுமா.?

tamil actors
tamil actors

அண்மை காலமாக டாப் நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்துகின்றனர் அந்த வகையில் அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா அந்த லிஸ்டில் இருக்கின்றனர். இவர்களது படம் வருடத்திற்கு ஒருமுறை வந்தாலும் அந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அடித்து நொறுக்குகின்றன. சொல்லப்போனால் அசால்டாக எல்லா படமும் 200 கோடியை தொட்டு விடுகிறதாம்.

மேலும் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்கள் அனைவருமே நன்றாகவே காசு பார்க்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் ஒவ்வொரு நடிகரும் தனது படம் வெற்றியடையும் போது தனது சம்பளத்தை சீராக அதிகரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் குறித்து தற்போது தகவல் ஒன்று கிடைத்துள்ளது அது குறித்து விளாவாரியாக பார்க்கலாம். முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் தளபதி விஜய் இவர் ஒரு திரைப்படத்திற்கு சுமார் 118 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று தகவல் வெளியாகிறது.

விஜய் இப்பொழுது தனது 60ஆவது திரைப்படத்தில் நடித்துவருகிறார் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் அஜித்குமார் இவர் தனது 61 வது திரைப்படத்திற்காக சுமார் 105 கோடி சம்பளம் வாங்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 105 கோடி ஒரு திரைப்படத்திற்கு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பவர் உலகநாயகன் கமலஹாசன் ஒரு படத்திற்காக சுமார் 35 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சூர்யா இவர் ஒரு படத்திற்காக சுமார் 28 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் ஒரு படத்திற்கு சுமார் 25 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.