தமிழ் சினிமா உலகில் இரு தூண்களாக இப்பொழுது பார்க்கப்படுபவர்கள் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து ரசிகர்களை மிகப்பெரிய அளவில் உயர்த்திக்கொண்டு ஓடுகின்றனர் அந்த வகையில் இப்பொழுது நடிகர் அஜித்குமார் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல இருக்கிறது. ஏகே 61 திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரியை மையமாக வைத்து படம் உருவாகிறது இந்த படத்தில் ஆக்சனுக்கு பஞ்சமில்லை என தெரிவிக்கப்படுகிறது. நடிகர் விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படத்தை வம்சி இயக்குகிறார் தில்ராஜு மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறார். இந்த படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, ஸ்ரீகாந்த், குஷ்பூ, ராஷ்மிகா மந்தனா.
மற்றும் ஜெயசுதா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர் இந்த படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த இரண்டு நடிகர்களும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகின்றனர் இவர்கள் இதுவரை நேருக்கு நேர் பல தடவை மோதி இருக்கின்றனர் அதில் பெரும்பாலும் விஜய் தான் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆனால் ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை அஜித், விஜய் மோதுவார்கள் என எதிர்பார்த்து வருகின்றனர் அந்த வகையில் அஜித்தின் ஏகே 61 விஜயின் வாரிசு படங்கள் மோதும் என பலரும் எதிர்பார்த்தனர் ஆனால் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் மட்டுமே முடிவடைந்து உள்ளதால் மீதி படத்தை எடுப்பதில் தாமதம் ஆகி உள்ளது அதனால் பொங்கலுக்கு ஏகே 61 படம் வெளிவருவது கேள்விக்குறியாக அமைந்துள்ளது.