காதல் சின்னமான தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வந்த தல அஜித்.! அதுவும் பார்ப்பதற்கு எப்படி வந்துள்ளார் பார்த்தீர்களா.

thala-ajith

வெள்ளித்திரையில் நீண்ட வருடங்களாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் தல அஜித் இவரது நடிப்பில் பல மாதங்களாக உருவாகிவந்த திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படம் அண்மையில் முடிந்தது என இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது அதேபோல தல அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எந்த இயக்குனருடன் கைகோர்க்கிறார் என்பது பற்றி தெரியவில்லை.

பொதுவாகவே இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம் அந்த வகையில் வலிமை திரைப்படத்திற்கும் தல அஜித் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிட்டது.

மேலும் வலிமை திரைப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு ரஷ்யா நாட்டில் எடுக்கப்பட்டு வந்தது அண்மையில் தல அஜித் படப்பிடிப்பை முடித்து விட்டு பைக் ரைட் செல்லப் போவதாகவும் தகவல் வைரலாகி வந்தது அப்போது கூட தல அஜித்துடன் பல ரசிகர்களும் புகைப்படம் எடுத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து காதல் சின்னம் என்று அழைக்கப்படும் தாஜ்மஹாலை பார்ப்பதற்கு தல அஜித் அங்கு சென்றுள்ளார் அப்போது அவரை கண்ட ரசிகர்கள் பலரும் அவருடன் செல்பி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர் மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் ஒருவேளை தல அஜித் பைக்கிலேயே வந்துவிட்டாரா என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இதனைத்தொடர்ந்து இந்த புகைப்படங்களில் தல அஜித் பார்ப்பதற்கு மிகவும் மாஸாக இருக்கிறார் அது மட்டுமல்லாமல் எளிமையாகவும் இருப்பதால் இந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து தல அஜித் தாஜ்மஹாலை பார்ப்பதற்கு எப்படி வந்துள்ளார் என்று பாருங்கள் என இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் தல அஜித்தின் வலிமை திரைப்படம் நன்றாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது ஏனென்றால் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மிகவும் பயங்கரமாக இருந்தது அதேபோல் வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரிந்தால் போதும் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

ajith
ajith