துணிவு திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைய போவதாக தகவல்கள் உறுதியாக பரவின ஆனால் அவர் சொன்ன கதை பிடிக்காமல் போனதால் படக்குழு அவரை கைகழுவியது.
தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்றால் ஏகே 62 திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன ஆனால் இதுவும் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு நடிகர் அஜித் பற்றி சில தகவல்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதாவது நடிகர் அஜித்குமார் கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு போன் போட்டு நாம் இணைந்து படம் பண்ணலாமா என கேட்டு இருக்கிறார் இதற்கு பிரசாந்த் நீல் ஆச்சரியப்பட்டு “படம் பண்ணலாமே” எனக் கூறியுள்ளாராம் உடனே பிரசாந்த் நீல் ஓகே சொல்ல காரணம் அவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது.. சிறிது காலமாகும் என சொல்லி இருக்கிறார் பிரசாந்த் நீல் தற்போது அடுத்தடுத்து இரண்டு மிகப்பெரிய படங்களை இயக்கி வருகிறாராம் ஒரு படத்தை முடிக்கவே ஒன்றரை வருடங்கள் ஆகும் என்பதால் தற்பொழுது அஜித்தை வைத்து படம் எடுக்க முடியாத சூழல் நிலவி இருக்கிறதாம்..
இப்போ இது அஜித்துக்கும் சரி, பிரசாந்த் நீலுகும் சரி சற்று வருத்தத்தை கொடுத்திருக்கிறது. இந்த கூட்டணி இணைவது உறுதி என கூறப்படுகிறது அது ஏகே 63 அல்லது ஏகே 64 திரைப்படமாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.