துணிவு படத்தில் வினாயக்காக களமிறங்கிய அஜித்.! அனல் பறக்கும் தகவலை கூறிய ஹெச் வினோத்…

thunivu
thunivu

நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் ஹெச் வினோத் கூட்டணியில் மூன்றாவது திரைப்படமாக உருவாகி உள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதால் ரசிகர் மத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து துணிவு திரைப்படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டதில் இருந்து துணிவு படத்தின் அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என ஏற்கனவே பட குழு அறிவித்து இருக்கிறது. ஆனால் இன்னும் ஃபர்ஸ்ட் சிங்களுக்கு நாள் குறிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று துணிவு படத்திலிருந்து சில போட்டோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பற்றி வருகிறது. அதில் நடிகர் அஜித், மஞ்சு வாரியார், சமுத்திரகனி, ஆகியோரின் புகைப்படங்கள் செம்ம மாஸ் போடோக்கள் வெளியாகியது.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித் அவர்கள் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது ஆனால் இதற்கு துணிவு படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் அவர்கள் இந்த படத்தில் அஜித் வில்லனாக நடித்தால் மங்காத்தா போல் இருக்கிறது என அதற்கு விமர்சனம் செய்வார்கள் அதனால் இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் அவர்கள் வில்லனாக நடிக்க வில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் துணிவு திரைப்படம் பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை தான் என பலரும் கூறி வந்த நிலையில் அந்தக் கதை முழுக்க முழுக்க வதந்தி என தெரிவித்து இருக்கிறார் இந்த படம் பேங்க் ராபரையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது கிடையாது என்று இயக்குனர் ஹச் வினோத் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.