தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டு சிறப்பாக தமிழ் திரையுலகில் வலம் வருபவர் தல அஜித். இவர் ஆரம்ப காலத்தில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தார்.
அப்படி இவர் நடித்த காதல் மன்னன், அட்டகாசம், அமர்க்களம் ,காதல் கோட்டை போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதன் மூலம் பெண் ரசிகர்களையும், ரசிகர்களையும் தனது நடிப்பின் மூலம் கட்டி இழுத்தார் அஜித். அதிலும் அட்டகாசம் படம் இவருக்கு ஒரு மெகா ஹிட் கொடுத்து அதன் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை இழுத்தார்.
இந்த படத்தை சரண் அவர்கள் இயக்கியிருந்தார் இந்த நிலையில் இயக்குனர் சரண் அவர்கள் கமலஹாசனை வைத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ் இப்படத்திற்கு, அஜித் இருககும் இடையே நடந்த சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் இந்தியில் வெளியான முன்னாபாய் எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக்தான் இத்திரைப்படம். இத்திரைப் படத்தில் கமலுடன் இணைந்து பிரபு, பிரகாஷ், கிரேசி மோகன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர் இப்படத்தை சரண் அவர்கள் அமைத்திருந்தார் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.
இப்படம் திரையரங்கில் வெளிவந்து இதுவரை 16 ஆண்டுகள் ஆகின இதனை ரசிகர்கள் பெரிதும் சமூகவலைதளத்தில் கொண்டாடினர் இப்படம் குறித்து சரண் அவர்கள் கூறியிருந்தது. இப்படத்திற்கு கமல் சார் அவர்கள் 45 நாள் தான் ஷட்டிங் கால்ஷீட் கொடுத்திருந்தார் மேலும் 15 நாட்களில் எல்லா வேலையும் ஆரம்பித்திருக்க வேண்டும் என சொன்னார் மூன்றே மாதத்தில் வெளியாக வேண்டும் என்பது கட்டாயமும் இந்த படத்திற்கு இருந்தது.
ஆனால் அப்பொழுது நான் அஜித்தை வைத்து அட்டகாசம் திரைப்படத்தை எழுதி இருந்தேன் இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிவடைந்த பிறகு அடுத்த கட்ட ஷூட்டிங் அஜித்தை வைத்து எடுக்க எரிந்த நிலையில் இந்த வாய்ப்பு கிடைத்தது இதையடுத்து உடனே அஜித் சாரை நான் சந்தித்தது இதுபோல் கமல் சார் படம் வந்துள்ளது என்று நான் கூறினேன் அதற்கு நீங்கள் போய் அதை முடித்துவிட்டு வாங்க நானும் அதற்குள் ஜி படத்தின் ஷூட்டிங்கை முடித்து விடுகிறேன் என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
அஜித் ஒருவேளை ஓகே செல்லவில்லை என்றால் என்னால் கமலை வைத்து வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தை எடுத்து இருக்க முடியாது என கூறினார்.