நடிகர் அஜித்குமார் சினிமா ஆரம்பத்தில் பெரிதும் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளினார் ஆனால் காலப்போக்கில் ஆக்சன் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் தான் தீனா.
இந்த படத்தில் காதல் செண்டிமென்ட் என அனைத்தும் இருந்தாலும் ஆக்சன் அதைவிட அதிகமாக இருந்ததால் இந்த படம் அப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்த படத்திற்கு பிறகுதான் அஜித்தை அனைவரும் தல என செல்லமாக அழைத்தனர்.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து சுரேஷ்கோபி, லைலா மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர் இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இந்த படத்தில் அஜித்துடன் நடித்த சம்பவம் குறித்து சம்பத் ராம் அண்மையில் பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார். அவர் கூறியது நான் அஜித்தின் தீனா படத்தில் நடித்திருந்தேன்.
தீனா படத்தில் அஜித் வண்டியில் வலம் வருவார் அந்த வண்டி தன்னுடையது தான் என பேசி உள்ளார் அதுகுறித்து அவர் விலாவாரியாக சொன்னது. படப்பிடிப்பின்போது பைக் இல்லாததால் எனது எனது சொந்த பைக்கை பயன்படுத்தினார்கள் அந்த படம் முழுக்க அஜித் அந்த வண்டியை தான் ஓட்டி வந்தார்.
அதன் பிறகு நான் அந்த வண்டியை பார்க்க வில்லை வீட்டு வாடகை காரணமாக விற்றுவிட்டேன் என கூறி உள்ளார் அதன் பிறகு என்னால் சம்பாதித்து வண்டியை வாங்க முடியவில்லை அதனால் நான் தீனா படம் ஓடும் பொழுது தனது வண்டியைப் பார்த்து ஆறுதல் அடைந்து விடுவேன் என பேட்டியில் அவர் சொல்லியுள்ளார்.