தமிழ் சினிமாவில் ரஜினியின் இடத்தை பிடிக்க தற்போது மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நடிகர்களில் முதன்மையானவர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய் தான். இவர்களது இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருப்பதோடு மட்டுமல்லாமல் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மாபெரும் வசூல் வேட்டை நடத்துகின்றன.
தற்போதும் இவர்கள் இருவரும் சிறப்பான கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். தளபதி விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் மூன்றாம் கட்ட ஷூட்டிங் ரஷ்யாவில் நடத்தப்பட்டு வருகிறது அதுபோல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் இரண்டு வருடங்களுக்கு மேலாக சூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது.
இப்படி சினிமாவில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு வந்தாலும் நிஜத்தில் இருவரும் வேறுமாதிரியான பண்புகளைக் கொண்டவர்களாக இருந்துள்ளனர் அதனை அவருடன் பழகிய பல நட்சத்திரங்கள் நாம் கூறியுள்ளோம் அதுபோல தற்போது நடிகர் விஜய் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான “தலைவா” திரைப்படத்தை ஏ எல் விஜய் அவர்கள் எடுத்திருந்தார்.
ஆனால் படம் வெளிவந்து எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் விஜய் ரசிகர்களுக்கு நல்ல தீனி போட்டது இந்த படம் குறித்து சமீபத்தில் சுவாரசியமான தகவல் ஒன்றை இயக்குனர் ஏ எல் விஜய் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். “தலைவா” படத்தில் விஜய் பாடிய வாங்கன்னா வனக்கங்கன்னா பாடலை முதலில் கேட்டது தல அஜித் தான் என கூறினார்.
மேலும் அந்த பாடலை கேட்டுவிட்டு இந்த பாடல் நிச்சயம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் இந்த பாடல் அவருக்கு மிக கச்சிதமாக பொருந்தும் என கூறி வாழ்த்தினாராம். இச்செய்தியை ஏ எல் விஜய் சமீபத்தில் கூறினார்.