தமிழ் சினிமா உலகில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி அதில் வெற்றி கண்டதன் மூலம் முன்னணி இயக்குனர் என்ற இடத்தை அடைந்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய்யை வைத்து கத்தி, சர்க்கார் போன்ற படங்களை இயக்கினார் .
அத்திரைபடங்கள் மாபெரும் வசூல் பெற்றதன் மூலம் இவர் தமிழ் சினிமாஉச்சத்திற்கு சென்றார் அதுமட்டுமில்லாமல் மேலும் தனது சம்பளத்தை அதிகரித்துக் கொண்டார். இப்படி சினிமா உலகில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்று ஜொலித்து வரும் இவருக்கு ஆரம்பத்தில் நுழைய வாய்ப்பு கொடுத்தவர் அஜித் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஏ ஆர் முருகதாஸ் உடன் அஜித் அவர்கள் இணைந்து தீனா என்ற திரைப்படத்தில் நடித்தனர் இத்திரைப்படத்தின் அவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து நல்லதொரு பெயரை பெற்றதோடு மட்டுமல்லாமல் படம் மாபெரும் ஹிட்டடித்தது.
இந்த படத்தில் இருந்து தான் அஜித்துக்கு தல என்ற பட்டம் வந்தது ஆனால் அப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் கொடுக்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.ஏ ஆர் முருகதாசின் குருநாதரான பிரவீன் காந்தி அவர்கள் இணையதள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியது அஜித்துக்கு தல என்ற பெயர் வைத்தது இயக்குனர் முருகதாஸ் இல்லை அவரின் உதவி இயக்குனர் மோகன் தான் ஆனால் இந்த தகவல் இதுவரை வெளிவராமல் மூடி மறைத்து விட்டனர்.
ஆனால் முருகதாஸ் நான் தான் தல என பெயர் வைத்தேன் என்று பெருமையை வாங்கிக்கொண்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார் பிரவீன் காந்தி.