விஜய் நடிப்பில் ஒருவாகியுள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்து வெற்றி நடை கண்டு வருகிறது இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக அமைந்துள்ளது இதில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் ஷாம் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குறித்து பேசி இருக்கிறார். நடிகர் அஜித்குமார் ஷாம் நடித்த 12b திரைப்படத்தை பார்த்துவிட்டு அசந்து போனாராம்
ஏனென்றால் ஷாம் அறிமுக நடிகர் போல 12பி திரைப்படத்தில் நடிக்கவில்லை ஏற்கனவே பல படங்களில் நடித்தவர் போல இயல்பாக நடித்துள்ளது அஜித்திற்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ஆனால் அவரால் நேரில் சந்தித்து அதை சொல்ல முடியவில்லை என பேட்டி ஒன்றில் அஜித் தெரிவித்திருக்கிறார்.
இந்த விஷயத்தை அறிந்த நடிகர் ஷாம். உடனடியாக அஜித்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்று சந்தித்துள்ளார் அப்பொழுது அஜித் ஷாமை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் முதல் படமான 12B திரைப்படத்தில் சூப்பராக நடித்துள்ளீர்கள். ஏற்கனவே 10 படங்களில் நடித்த அனுபவம் போலவே இருக்கு.. நல்லா பண்ணு என கூறியுள்ளாராம்.
அதன் பிறகு தனது திருமணத்திற்கு அழைத்தாராம் அஜித்தும் ஷாலினி உடன் அந்த திருமணத்திற்கு சென்று வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் பரிசாக ஒரு புதிய போனை கொடுத்திருக்கிறார். அதை இன்னமும் ஷாம் அப்படியே பாதுகாத்து வருவதாக கூறினார் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
