ஜெயிலர் பாடலை பார்த்து பிரமித்துப்போன அஜித்.! அனிருத்திடம் என்ன சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இதுவரை பல ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். இருந்தாலும் கடைசியாக நடித்த “அண்ணாத்த படம்” கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது.

இதனால் அடுத்த படம் மிகப்பெரிய ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என இளம் இயக்குனர் நெல்சன் உடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்துள்ளார். அவருடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

அண்மையில் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் போன்றவை வெளிவந்த நிலையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள “காவலா பாடல்” வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது இந்த பாடலுக்கு தமன்னா கிளாமராக நடனம் ஆடி இருந்தார். மேலும் இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்திறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அஜித் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள காவலா பாடலை பார்த்துவிட்டு அனிருத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. பாடல் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் என கூறினாராம் இதற்கு முன்பு விஜயின் பாடலுக்கு அனிருத் சூப்பராக இசையமைத்திருந்தார்.

ajith
ajith

அதற்கு அஜித் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார் என்பது கூடுதல் தகவல். இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.