கோடிக்கணக்கான பணத்தைப் பார்த்து பயந்த அஜித்.? உதவி செய்வதாக நினைத்து ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட ரசிகர்கள்

ajith
ajith

தமிழ் சினிமாவில் அதிக தோல்வி படங்களை கொடுத்த முன்னணி நடிகர் அஜித்குமார் இவர் அண்மைகாலமாக சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து படம் பண்ணுவதால் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்கிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து தனது 62வது திரைப்படத்தில் நடிக்க அஜித் திட்டமிட்டு இருக்கிறார்.

தற்பொழுது வெற்றி நடிகராக ஓடிக்கொண்டிருக்கும் அஜித் குமார் அவ்வபோது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மக்களுக்கு மற்றும் தன்னை நாடி வருபவர்களுக்கும் உதவிகளை செய்து அசத்துகிறார். இதனால் அனைவருக்கும் பிடித்தவராக அஜித் இருக்கிறார். இப்படிப்பட்ட நடிகர் அஜித்குமார் தன்னுடைய அம்மா பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

அந்த அறக்கட்டளையின் மூலம் அவர் வசித்து வரும் திருவான்மியூர் பகுதியில் மரம் நடுவது இல்லாதவர்களுக்கு உதவி செய்வதென்று நிறைய சேவைகளை செய்து வந்திருக்கிறார் மேலும் இந்த விஷயம் வெளியே தெரியாதவாறு பார்த்துக் கொண்டார் ஆனால் அஜித் ரசிகர்களோ எப்படியோ இந்த விஷயத்தை தெரிந்து கொண்டனர் அதன் பிறகு அஜித் ரசிகர்கள் அஜித் போலவே நாமமும் உதவ வேண்டும் ..

என கருதி அந்த அறக்கட்டளைக்கு பண உதவி பண்ணி செய்தனர் குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் அறக்கட்டளைக்கு பணம் வர ஆரம்பித்தது இதை பார்த்த அஜித் அதிர்ந்து போனாராம் அந்த அளவிற்கு பணம் வந்தது அஜித்திற்கு பயத்தை கொடுத்து விட்டது. அஜித்தின் ஆசையோ தன்னுடைய அம்மா பெயரில் தான் சொந்த காசை வைத்து அதை நடத்த வேண்டும் என நினைத்தார்.

மற்றவர்கள் காசு கொடுத்தது நன்றாக இருந்தாலும் அஜித்தின் ஆசைக்கு உடையூராக இருந்தால் அந்த அறக்கட்டளையை இழுத்து மூடிவிட்டார்.. அறக்கட்டளையின் மூலம் பலர் காசு பார்த்து வரும் நிலையில் கோடிக்கணக்கில் காசு வந்ததால் அந்த நிறுவனத்தை அஜித் மூடிவிட்டார் இந்த விஷயம் தற்பொழுது அஜித் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.