தல அஜித் சினிமா ஆரம்பத்தில் தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் நம்பி கதையை கேட்காமல் படத்தில் நடிக்க கூடியவராக இருந்தால் பல வெற்றி தோல்விகளை கொடுத்தால் ஆனால் அது எல்லாம் சினிமாவில் நம்மை நிலை நிறுத்துவது என்பதை புரிந்து கொண்ட அஜித் சமீபகாலமாக கதை களத்தை நன்கு தேர்ந்தெடுத்து நடித்தால் அந்தப் படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றன.
அந்த வகையில் பல்வேறு திரைப்படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது வலிமை என்ற திரைப்படத்தையும் கதையை கேட்டு சூப்பராக நடித்து முடித்துள்ளார் இந்த திரைப் படம் வெளிவந்தால் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழ் சினிமாவில் கொடுக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.
பெரும்பாலும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்களும் அஜித்தை தேடி வரும் நிலையில் அஜித் சில வருடங்களுக்கு முன்பாக ஒரு இயக்குனருக்கு போன் கால் மூலம் பேசி அவரிடம் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
அது குறித்து தற்போது பார்ப்போம் மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான ஐயப்பனும் கோஷியும் என்ற திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு வேற லெவலில் வசூல் வேட்டை நடத்தியது இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்தனர் இந்த படத்தை இயக்கியவர் சாச்சி.
அஜித் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு சாச்சி போன் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு உங்களது படத்தில் நடிக்க விருப்பம் எனவும் கூறினாராம் இதனையடுத்து சாச்சியும் உடனடியாக தனுஷ்கோடியை மையபடுத்தி ஒரு பிரம்மாண்ட கதையை உருவாக்க முனைப்பு காட்டினார். இருவரும் இணைந்து படத்தில் பணியாற்ற ஆசை பட்ட நிலையில் திடீரென அவர் உயிரிழந்தார்.
இது அஜித்தை பெரிதும் அப்பொழுது பாதித்து விட்டதாம். இச்செய்தி தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது.