கடந்த 2019-ம் வருடம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்த திரைப்படம் விசுவாசம், இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமான தியாகராஜன் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்திருந்தார்.
அதேபோல் அஜித்திற்கும் முதன்முறையாக இசையமைத்திருந்தார் டி இமான். அதனால் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, தல அஜித்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமாவில் உள்ள பிரபலங்களும் அஜித்தின் ரசிகர்கள்தான், அந்த வகையில் சினிமா பிரபலங்கள் ஒவ்வொருவரும் பேட்டியிலும் அஜித்தை பற்றி பேசுவார்கள்.
அந்த வகையில் டி இமான் தனது இசையில் அஜித்தை பிடிக்கும் என்பதை காட்டவேண்டும் என, ஒரு பாடலில் முதல் வரியில் தல அஜித்தை பெருமைப்படுத்தும் விதமாக வசனங்களை எழுதி இருந்தாராம், அதாவது விஸ்வாசம் திரைப்படத்தின் முதல் பாடலான அடாவடி தூக்குத் துரை என்ற பாடலில் இரண்டாவது வரி அலப்பறையான எங்க தல என இடம் பெற்று இருந்ததாம்.
இந்த வரி அஜித்தை பெருமைப்படுத்தும் விதமாக இருந்ததால் அஜித் அதை பார்த்துவிட்டு, என்னை பெருமைப்படுத்தும் விதமாக எந்த வரியும் எழுத வேண்டாம் என கூறிவிட்டாராம் அதன்பிறகுதான் அடாவடி தூக்குத் துரை அலப்பறையான துரை என மாற்றப்பட்டது. இதனை சமீபத்தில் டி இமான் ஒரு பேட்டியில் கூறினார். அந்தப் பாடலில் அலப்பறையான எங்க தல என இடம்பெற்றிருந்தால் திரையரங்கமே அதிர்ந்து இருக்குமென பலரும் கூறுகிறார்கள்.