நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி தோல்வி படங்களை கொடுத்து வருகிறார் இருப்பினும் அஜித்தின் சினிமா மற்றும் வாழ்க்கை ஆகியவை ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போனதால் நாளுக்கு நாள் அவரை பின் தொடர்ந்து ஒருவரை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
சினிமா உலகில் தான் செய்யும் தொழிலில் மெனக்கெட்டு பணியாற்றி வருகிறார் அந்த அந்தக் காரணத்தினால் அஜித்தின் சமீபகால திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்லதொரு கருத்துகளை எடுத்துரைக்கும் திரைப்படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்களின் மகிழ்விக்கின்றன
அந்த வகையில் விசுவாசம் நேர்கொண்டபார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்கள் நல்லதொரு வெற்றியை ருசித்த நிலையில் நடிகர் அஜீத் தற்போது தனது 61 வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளை செய்து வருகிறார் இத்திரைப்படம் முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரமாக இருப்பதால் அதற்கு ஏற்றபடியே தயாராகி வருகிறார்.
இந்த படம் ஒரு மிகப்பெரிய ஆக்சன் திரைப்படம் ஆகியிருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது இப்படி இருக்க நடிகர் அஜித் தனது அடுத்த பட இயக்குனர் தேர்வு செய்துள்ளார் அந்த வகையில் அஜித்தின் 62 வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் பிரம்மாண்ட பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் அஜித் சினிமாவையும் தாண்டி மற்ற பிரபலங்களை முக்கிய விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வழக்கம் அந்த வகையில் நடிகர் அஜித்குமார் சிவாஜி கணேசனின் மகனும், நடிகருமான பிரபு வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..