ரஜினி பட சாதனையை முறியடிக்க முடியாமல் திணறும் அஜித் – விஜய்.! இப்பயில்ல எப்பொழுதுமே முடியாது.?

rajini
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருகிறார். வயது அதிகமானாலும்  ரஜினி வருடத்தில் ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை தன் கண்ட்ரோலில் வைத்துக் கொண்டு இருப்பதால் ரஜினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இப்பொழுது இருக்கும் அஜித் விஜய் போன்ற நடிகர்களின் மார்க்கெட்டுக்கு நிகராக ரஜினி இருப்பதால் இன்றும் அவரது இடத்தை பிடிக்க முடியாமல் தவிக்கின்றனர் இப்பொழுது கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169 ஆவது திரைப்படம் ஆன ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்பொழுதும் கமர்சியல் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம் இருப்பினும் ஒருசில வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது ரஜினியின் வழக்கம் அந்த வகையில் ரஜினி நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியாகிய சூப்பர் ஹிட் திரைப்படம் சந்திரமுகி.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமெண்ட் கலந்த படமாக உருவாகியிருக்கும். இதில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு, நயன்தாரா, விஜயகுமார் போன்ற நடிகர்களின் நடிப்பு வியக்க வைக்கும் வகையில் இருந்தது இந்த படம் அப்போது வெளியாகி சூப்பர் ஹிட் அடித்ததோடு மட்டுமல்லாமல் அதிக வசூல்.

செய்த திரைப்படமாக பேசப்படுகிறது சந்திரமுகி திரைப்படம் 800 நாட்கள் ஓடியது அதன்பின் வெளிவந்த எந்த திரைப்படமும் இந்த படத்தின் சாதனையை முறியடிக்க முடியவில்லை குறிப்பாக அஜித் விஜய் போன்ற நடிகைகள் படங்கள் இதைத் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.