இந்த நடிகர் முன்னாடி அஜித் விஜய் எல்லாம் பச்ச மண்ணு.. அஜித்-விஜய் சாதனையை அசால்டாக ஓரங்கட்டிய முன்னணி நடிகர்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு முன்னணி நடிகர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும் அந்த வகையில் ஒவ்வொரு நடிகர்களின் ரசிகர்கள் அவர்களைப் பற்றிய செய்தி அல்லது அவர்களின் படங்களை பற்றிய தகவல் எதுவந்தாலும் சமூகவலைதளத்தில் வெறித்தனமாக கொண்டாடி சாதனையாக மாற்றுவார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருப்பவர் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் மாறி மாறி சாதனை படைப்பார்கள், அதேபோல் ஒருவரின் சாதனையை மற்றொருவர் முறியடிப்பார்கள் இது காலங்காலமாக நடந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் கொஞ்சம் காலமாக தமிழ் சினிமா ரசிகர்கள்தான் ட்விட்டரில் சாதனை படைத்து வந்தார்கள் ஆனால் தற்போது அண்டை மாநில நடிகர்களின் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்காக புதிது புதிதாக சாதனை படைத்து வருகிறார்கள்.

அந்தவகையில் தெலுங்கு ஹீரோக்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது சமூக வலைத்தளத்தில், தமிழ் சினிமா நடிகர்களை விட தெலுங்கு சினிமா நடிகர்கள் இந்திய அளவில் மிகவும் பிரபலம், அந்த வகையில் ட்விட்டரில் தளபதி விஜய் ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை பத்துலட்சம் ட்விட்கள் போட்டு சாதனை படைத்தார்கள்.

ஆனால் அந்த சாதனையை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் அசால்டாக முறியடித்துள்ளது வைரலாகி வருகிறது, தளபதி விஜய்யின் ரசிகர்கள் 10 லட்சம் ட்வீட்கள் தான் செய்திருந்தார்கள் ஆனால் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சுமார் 60 லட்சம் பதிவுகளை பதிவிட்டு தமிழ் நடிகர்களின் சாதனையை அசால்டாக முறியடித்துள்ளார்.

இதைப் பார்த்த அஜித் விஜய் ரசிகர்கள் அடுத்து அதை விட அதிகமாக சாதனை படைக்க வேண்டும் என உக்கிரமான வெறியில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment

Exit mobile version