தமிழ் சினிமா உலகில் அஜித் விஜய் ரஜினி போன்ற டாப் ஹீரோக்களை வைத்து இளம் இயக்குனர்கள் தொடங்கி முன்னணி இயக்குனர்கள் பலரும் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனர்கள் சிறந்த படைப்புகளை கொடுத்து அசத்தி வருவதால் டாப் நடிகர்கள் கூட இளம் இயக்குனர்கள் படங்களில் பணியாற்ற விரும்புகின்றனர்.
இதனால் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர இயக்குனரான பலர் தற்போது வெவ்வேறு பக்கம் சென்று படங்களை இயக்குகின்றனர். அவர்கள் யார் என்பதை தற்போது பார்ப்போம். 1. ஷங்கர் :தமிழ் சினிமா உலகில் பிரமாண்ட பட்ஜெட்டில் பல்வேறு படங்களை எடுத்து வெற்றி கண்டவர் இயக்குனர் ஷங்கர்.
தமிழில் இதுவரை இயக்குனர் ஷங்கர் அர்ஜுன், விஜய், ரஜினி, கமல், பிரசாந்த் போன்ற நடிகர்களை வைத்து சிறப்பான படங்களை கொடுத்து அவர்களை உயர்த்தி விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீப காலமாக இயக்குனர் ஷங்கருக்கு தமிழ்சினிமாவில் எதையெடுத்தாலும்.. அது அவருக்கு பாதகமாக அமைந்த காரணத்தினால் தற்போது தெலுங்கு பக்கம் திசை திரும்பியுள்ளார். அந்த வகையில் ராம் சரணை வைத்து RC 15 என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
2. ஏ ஆர் முருகதாஸ் : ஷங்கரை தொடர்ந்து இயக்குனரும், தயாரிப்பாளருமான ஏ ஆர் முருகதாஸ் தற்போது தமிழ் சினிமாவிலிருந்து நழுவி தெலுங்கு பக்கம் அடியெடுத்து வைக்க உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் அஜித், விஜய், ரஜினி போன்ற நடிகர்களை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார்.
இதன் மூலம் முன்னணி நடிகர் என்ற பட்டத்தை வெகு விரைவிலேயே கைப்பற்றினார் முருகதாஸ் இருப்பினும் சர்க்கார் திரைப்படத்தின் கதை திருட்டு விஷயத்தில் இவர் மாட்டியதால் தற்போது தமிழ் சினிமாவில் பெரிய மார்க்கெட் இல்லாமல் இருப்பதால் தெலுங்கு பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார்.
3. லிங்குசாமி :அவரைத் தொடர்ந்து சைலண்டாக தெலுங்கு பக்கம் உள்ளே நுழைந்து உள்ளவர் லிங்குசாமி இவர் ராம் பொத்தினியை வைத்து தி வாரியர் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். படம் இந்த வருடம் இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் சிறந்த படைப்பாளிகளான ஷங்கர், முருகதாஸ் மற்றும் லிங்குசாமி போன்றோர் தெலுங்கு பக்கம் திசை திருப்பி உள்ளது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.