ஒரே ஒரு பேனர்.. ஒட்டுமொத்த அஜித், விஜய் ரசிகர்களின் கோபமும் குறைந்தது.! வைரலாகும் புகைப்படம்

ajith and vijay

தமிழ் சினிமா உலகில் போட்டி பொறாமைகள் எப்பொழுதுமே இருந்து கொண்டு இருக்கின்றன எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் ஆகியவர்களை தொடர்ந்து அஜித் விஜய் இருவருக்கும் இடையே நல்ல போட்டி எப்பொழுதுமே இருந்து கொண்டு இருக்கிறது இருப்பினும் கடந்த எட்டு வருடங்களாக இவர்கள் இருவரும் மோதாமல்..

இருந்து வந்த  நிலையில் எதிர்பாராத விதமாக அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு ஆகிய படங்கள் மோதுகின்றன. இதில் யார் கை ஓங்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து உருவாக்கியுள்ளது.

அதேசமயம் இந்த படம் அயோக்கியர்களின் ஆட்டமும் நிறைந்த ஒரு படமாக இருக்கும் என இயக்குனர் ஹச். வினோத் கூறியுள்ளார் மறுபக்கம் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகி உள்ளதாக படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் கூறியுள்ளனர்.

இரண்டு படமும் வெளிவர இன்னும் விரல்விட்டு என்னும் நாட்கள் தான் இருக்கின்றன இதனால் இரண்டு படக்குழுவும் பிரமோஷனை வேற லெவலில் செய்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அஜித், விஜய் ரசிகர்கள்  ட்விட்டர் பக்கங்களில் வார்த்தை போர் நடத்தி வருகின்றனர் இதோடு முடிந்தபாடு இல்லாமல் இரண்டு ரசிகர்களும் பேனர், கட்டவுட் வைத்து அசத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் ரசிகர் மட்டும் ஒரே ஒரு பேனரில் அஜித், விஜய் போட்டோவை வைத்து இந்த பொங்கலை தெறிக்க விட போறோம் துணிவு, வாரிசு படத்திற்கு தனது வாழ்த்துக்கள் என கூறி உள்ளார் இந்த நிகழ்வு தற்போது இரண்டு ரசிகர்களையும் ஒன்று சேர்த்துள்ளதோடு மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தை பெரிய அளவில் வைரலாக்கியும் வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

ajith and vijay
ajith and vijay