தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களாக வலம் வந்து கொண்டு இருப்பவர்கள் அஜித்,விஜய். இவர்கள் இருவரும் சினிமாத்துறையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இருவரும் இரு நல்ல நண்பர்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக பல இடங்களில் விஜய் அவர்கள் அஜித்தை பற்றி பல இடங்களில் பேசி உள்ளார் அதேபோல தல அஜித் அவர்களும் விஜயின் மகனான சஞ்சய் பற்றி சமீபத்தில் விசாரித்தார் என்பதும் நாம் அறிந்ததே.
அதுபோல நிஜவாழ்க்கையில் தனது சிறந்த நட்பை வெளிப்படுத்தி வருகின்றனர் தற்போது ஊரடங்கு உத்தரவால் பலபிரபலங்கள் லைவ் சேட்டில் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர்.
அப்படி அஜித், விஜய் இருவரும் லைவ் சாட் வந்தால் அது இன்டர்நெட்டை அதிரவைக்கும் என சோனி நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கற்பனையான பதிவை வெளியிட்டுள்ளது. இந்த பதிவிற்கும் பலர் தனது கருத்துக்களையும் மற்றும் லைக்குகளையும் வாரி வழங்கி வருகின்றனர்.
இது மட்டும் உண்மையாக நடந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என இரு தரப்பு ரசிகர்களும் கூறிவருகின்றனர்.