தமிழ் சினிமாவில் பல தயாரிப்பாளர்கள் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து விட்டு காணாமல் போய் விடுவார்கள், ஆனால் ஒரு சில தயாரிப்பாளர்கள் நீண்ட காலமாக படத்தை தயாரித்து வருகிறார்கள், காணாமல் போன பல தயாரிப்பாளர்களில் ஏ எம் ரத்னம் ஒருவர்.
இவர் தமிழ் சினிமாவில் வில்லங்க தயாரிப்பாளர் என்று கூறுவார்கள், எம் ரத்னம் தல தளபதி-யை வைத்து படம் தயாரிக்கும் பொழுது பலரை பகைத்துக் கொண்டு பல நடிகர்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார், இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஏ எம் ரத்னம் விஜயின் கில்லி அஜித்தின் வேதாளம், என்னை அறிந்தால், ஆரம்பம் என பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
ஏ எம் ரத்னம் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகிய வேதாளம் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு தயாரித்தார் அதன் பிறகு தமிழில் எந்த ஒரு படத்தையும் தயாரிக்க வில்லை. அஜித்தின் வேதாளம் திரைப்படத்தை தயாரிக்கும்போது அஜித்திற்கும் ஏ எம் ரத்தினத்திற்கும் இடையே சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் திரைப்படத்தில் இனி நடிக்க மாட்டேன் என வெளிப்படையாக கூறி விட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் ஐந்து வருடம் கழித்து மீண்டும் படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார், ஆனால் இந்தமுறை தமிழில் இல்லாமல் தெலுங்கில் இப்படத்தை தயாரிக்க முடிவு எடுத்துள்ளார் அதனால் பவர் ஸ்டார் பவன் கல்யாணை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.
அதேபோல் இந்த திரைப்படத்தை பவன் கல்யாணுக்கு பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுதத ஹரிஷ் என்பவர்தான் இந்த திரைப்படத்தை இயக்க இருக்கிறார், இதற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது இந்த நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது, தெலுங்கு சினிமாவிலும் வெற்றி தயாரிப்பாளராக வலம் வந்த ஏ எம் ரத்னம். அடுத்ததாக தமிழில் முன்னணி நடிகர் ஒருவரை வைத்து புதிய திரைப்படத்தை தயாரிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் வலையில் எந்த நடிகர் சிக்குவார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.