தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களாக இருக்கும் அஜித் – விஜய் இருவரும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர் ஆனால் சினிமா என்று வந்துவிட்டால் இருவரும் படங்களின் மூலம் மோதிக்கொள்வது வழக்கம். ஆனால் அண்மை காலமாக இவர்கள் தனித்தனியாக தனது படங்களை ரிலீஸ் செய்து மிகப்பெரிய வசூலை அள்ளி வருகின்றனர்.
இப்பொழுது கூட நடிகர் அஜித் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61வது திரைப் படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் இறுதி கட்ட படப்பிடிப்பை நோக்கி நகர்ந்துள்ளது அதேபோல விஜய்யும் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார் இது விஜய்க்கு 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு திரைப்படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். இரண்டு கட்டப்பட பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பை நோக்கி பட குழு நகர்ந்து உள்ளது
சினிமாவில் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் அஜித் விஜய் பொது நிகழ்ச்சி போன்றவற்றில் தான் இருவரும் ஒன்றாக சந்தித்துக் கொள்வார்கள் ஆனால் அண்மையில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்து ஒன்று. ஆனால் 11 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.
எப்படி என்றால் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பும், விஜயின் வாரிசு படப்பிடிப்பும் விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் நிலையில் இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த செய்தி அஜித் – விஜய் ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்துள்ளது.