அண்மை காலமாக தமிழ் சினிமா படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை குறிப்பாக டாப் நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் கூட சொதப்புகின்றன. ஆனால் மற்ற மொழிகளில் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பல திரைப்படங்கள்.
தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்குகிறன. அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் உருவான RRR படம் நன்றாக ஓடியது அதேபோல கன்னட சினிமாவில் உருவான கே ஜி எஃப் 2 திரைப்படமும் எதிர்பார்க்காத அளவிற்கு நிறைய திரையரங்குகளில் ஓடியது.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கூட்டம் கூட்டமாக படத்தை பார்த்து அசத்தினர். கேஜிஎப் திரைப்படம் உலக அளவில் சுமார் 1200 கோடி வசூல் தள்ளி புதிய சாதனை படைத்தது தமிழகத்திலும் நல்ல வசூல் சாதனை படைத்தது குறிப்பாக அஜித் விஜய் போன்ற நடிகர்கள் படங்களையே முந்தியது.
கேஜிஎப் 2 திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே சுமார் 100 கோடி வசூலை அள்ளியது சென்னை ஏரியாவிலும் கெத்து காட்டியது. ஒரு திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தாலே நல்ல திரைப்படம் தான் அந்த வகையில் அண்மைகாலமாக அஜீத்-விஜய் படங்கள் கூட..
அந்த வசூலை செய்ய தடுமாறி உள்ளது ஆனால் கே ஜி எஃப் 2 திரைப்படம் சென்னை ஏரியாவில் மட்டுமே சுமார் 11 கோடி அள்ளி சாதனை படைத்துள்ளது. கேஜிஎப் 2 படத்திற்கு பிறகு வந்த எந்த திரைப்படமும் இந்த சாதனையை முறியடிக்க முடியாமல் தட்டுத் தடுமாறி வருகிறதாம்.