தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை எடுத்து அசத்தி வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் அண்மைக்காலமாக வெளிவரும் திரைப்படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் படங்களாக அமைகின்றன அந்த அளவிற்கு பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை எடுத்து அசத்தி வருகிறார்.
பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்து அதை விட பலமடங்கு லாபம் பார்த்தார்.அதன் பின் இவரது சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டியது இந்திய சினிமாவில் டாப் இயக்குனர்களில் இவரும் இருக்கிறார். அந்த அளவிற்கு தனது இந்த இரண்டு படத்தின் மூலம் அசுர வளர்ச்சியை எட்டியிருக்கிறார்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு இப்போது ஜூனியர் என்டிஆர் ராம்சரண் இவர்களை வைத்து இயக்கி வெற்றி கண்ட ஒரு திரைப்படம்தான் RRR.இந்தப்படம் பழைய காலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம் அதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் பக்காவாக பொருந்தி இருந்தால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
படம் ரொம்ப நீளம் அதாவது மூன்று மணி நேரமாக இருந்தாலும் எங்கேயும் போரடிக்காமல் செம அழகாக நகர்த்தி உள்ளதால் படம் 3 மணி நேரம் போவதே தெரியாமல் அழகாக இருந்ததாக மக்கள் மற்றும் உறவினர்கள் கூறினர் படத்தின் விமர்சனங்கள் நல்ல வரவேற்பை கண்டு வருகின்றன. அதுபோல வசூலிலும் சிறந்து வருகிறது.
முதல் நாளில் மட்டுமே 200 கோடிக்கு மேல் வசூல் செய்த RRR திரைப்படம் இரண்டாவது நாள் மிகவும் நல்ல வசூலையும் விமர்சனத்தையும் பெற்று உள்ளது இரண்டாவது நாளில் உலக அளவில் சுமார் 340 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவருகின்றன. இதன்மூலம் வலிமை, சர்க்கார் போன்ற அஜித் விஜய்யின் படங்களின் வசூலை இரண்டே நாட்களில் முந்தியது RRR.