எனக்கு டபுள் ஓகே.. விஜய்யிடம் போய் கதையை சொல்லு..! இரண்டு பேரையும் வச்சு படம் பண்ண போகும் பிரபல இயக்குனர்.

ajith-and-vijay
ajith-and-vijay

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் இரு தூண்களாக விளங்குபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்கும் தனித்தனியே எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் வெற்றி படமாக இருந்தாலும் சரி தோல்வி படமாக இருந்தாலும் சரி அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள்.

அஜித் மற்றும் விஜய் இருவரும் தனித்தனியே சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்ற நிலையில் இருவரையும் ஒரே படத்தில் ஒன்றாக பார்க்கவும் ரசிகர்கள் பலரும் ஆசைப்படுகின்றனர். ஏன் இந்த ஆசை தமிழ் சினிமாவில் உள்ள சில இயக்குனர்களுக்கும் இருக்கின்றன. அந்த வகையில் சென்னை 600028 திரைப்படத்தை இயக்கி அறிமுகமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு.

இதனை தொடர்ந்து அஜித்தை வைத்து மங்காத்தா என்னும் ஹிட் படத்தை கொடுத்தார். இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித் மற்றும் வெங்கட் பிரபு இருவருக்குமே இந்த படம் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுக்கு அஜித் மற்றும் விஜய் இருவரையும் ஒன்றாக இணைத்து ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது.

இதனை வெங்கட் பிரபுவின் அப்பாவும் இயக்குனருமான கங்கை அமரன் கூட ஒரு பேட்டியில் என் மகன் அஜித் விஜயை வைத்து ஒரு படம் எடுக்க ஆயத்தமாகி வருகிறார் என பேசி இருந்தார் இந்த செய்தி அப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரல் ஆகியது. ஆனால் இது குறித்து வெங்கட் பிரபு எதுவும் பேசாத நிலையில் தற்போது உண்மையிலேயே வெங்கட் பிரபு..

அஜித், விஜயை வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளதாகவும் அதற்கான கதை ரெடியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கதையை வலுப்படுத்த மூன்று இயக்குனர்களுடன் கொடுத்துள்ளாராம். இதனிடையே இந்த கதையை அஜித்திடம் கூறி வெங்கட் பிரபு சம்மதம் வாங்கியுள்ளார் அடுத்து விஜய் இடம் கூறி சம்மதம் வாங்குவது மட்டும் தான் பாக்கி என்பது போல் தெரிவித்துள்ளார்.