ஒரே நேரத்தில் அஜித், விஜய் படங்களில் நடிக்கும் ஹீரோயின்.! யாருடா அது.?

ajith-vijay
ajith-vijay

தமிழ் சினிமா உலகில் இரு தூண்கள் ஆக பார்க்கப்படுவது அஜித் மற்றும் விஜய். இருவரும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க தொடர்ந்து போட்டி போட்டு வருகின்றனர் ஆரம்பத்தில் பல தடவை போட்டி போட்டாலும் கடந்த எட்டு வருடங்களாக சோலோவாக படங்களை இறக்கி வந்த நிலையில் எதிர்பாராத விதமாக அடுத்த வருடம் பொங்கலுக்கு அஜித் விஜய் படங்கள் மோதுகின்றன.

இதனால் இந்த பொங்கலை திருவிழா போல கொண்டாட அஜித் விஜய் ரசிகர்கள் திட்டமிட்டு இருக்கின்றன அவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையில் இரண்டு படக்குழுவும் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது இன்று துணிவு திரைப்படத்திலிருந்து மூன்றாவது சிங்கள் கோலாகலமாக வெளியாக உள்ளது.

மறுபக்கம் விஜயின் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நேற்று கோலாகலமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அஜித் விஜய் நடிக்க இருக்கின்றனர் அந்த வகையில் அஜித்தின் 62 வது திரைப்படத்தை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்

அந்த படம் முகவரி பாணியில் இருக்கும் என சொல்லப்படுகிறது மறுபக்கம் தளபதி விஜய் தனது 67 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறதாம் இந்த இரண்டு திரைப்படங்களிலும் ஹீரோயின்னாக நடிக்கப் போவது நடிகை திரிஷா என சொல்லப்படுகிறது.

இதை அறிந்த பலரும் தற்பொழுது அவருக்கு வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர் ஒரு சிலர் உங்களுக்கு மீண்டும் ஜாக்பாட் அடித்துள்ளது எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதனால் திரிஷா செம்ம சந்தோஷத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் 2023 அவருக்கான ஆண்டாக அமையும் என சந்தோஷத்தில் இருக்கிறாராம்.