சிவகார்த்திகேயனிடம் இருக்கும் இந்த திறமை அஜித் – விஜய் கிட்ட இல்லை.. சினிமாவை நன்கு புரிஞ்சு வச்சிருக்காரு…

sivakarthikeyan-
sivakarthikeyan-

சினிமா உலகில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற நடிகர்கள் இளம் வயதில் இருந்தே தற்போது வரை பல சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து முன்னணி நடிகர்கள் என்ற அந்தஸ்தை பெற்று வருகின்றனர்.

ஆனால் இதற்கு மாறாக சினிமாவில் என்ட்ரி கொடுத்த சில வருடங்களிலேயே தற்போது முன்னாடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் அனைத்தும் காமெடி கலந்த படமாக இருப்பதால் ரசிகர்கள் என்ஜாய் செய்து பார்த்து வருகின்றனர். அதனால் இவருக்கு தமிழ் சினிமாவின் ரசிகர்களும் ஏராளம். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்களும் 100 கோடிக்கு மேல் வசுலை அள்ளி டாப் நடிகர்களின் வசூலுக்கு நிகராக அமைகின்றன.

மேலும் சிவகார்த்திகேயன் பெரும்பாலும் புதுமுக இயக்குனர்களுக்கே அதிக வாய்ப்பு கொடுத்து நடித்து வருகிறார். அப்படி நெல்சன் உடன் டாக்டர் படம், சிபி சக்கரவர்த்தி உடன் டான் போன்ற படங்களில் நடித்தார் இந்த இரண்டு படங்களுமே நல்ல வசூல் வேட்டை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் சில இளம் இயக்குனர்களிடம் கதையை கேட்டு வருகிறார். இதன் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் இரட்டை லாபம் பார்க்கிறாராம்.

அது எப்படி என்றால் அதாவது ஒரு பெரிய இயக்குனர்கள் படத்தில் நடித்தால் நடிகர்களின் பெயர் முன்னணியில் தெரியாது முற்றிலும் அது அந்த இயக்குனர்களின் படமாக தான் தெரியும் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருக்கும் ஆனால் அறிமுக இயக்குனர்களுடன் நடித்தால் தான் சொல்வதைக் கேட்டு தான் அவர்களும் நடந்து கொள்ள வேண்டும் மேலும் அந்த படங்களை தானே தயாரிக்கும் பொழுது  படத்தின் பட்ஜெட்டும் குறைவாக இருக்கும் என்பதை கணக்கு போட்டு தான் சிவகார்த்திகேயன் இளம் இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வருகிறாராம்.

மேலும் அந்த படங்களை தனது எஸ் கே பட நிறுவனம் மூலம் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தானே தயாரித்து வருவதால் இதன் மூலமும் ஒரு நல்ல லாபம் அவருக்கு கிடைக்கும். இப்படி படங்களில் நடிப்பது மற்றும் தயாரிப்பதன் மூலம் இரட்டை லாபம் பார்த்து வருகிறார் சிவகார்த்திகேயன் என சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன. மேலும் டாப் நடிகர்களான அஜித் விஜய்க்கு கூட இப்படி ஒரு யோசனை வந்ததில்லை எனவும் கூறி வருகின்றனர்.