தமிழ் சினிமாவில் வருடத்திற்கு பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் ஆனால் அவர்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்களா என கேட்டால் ஒரு சில குழந்தைகள் மட்டுமே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து தொடர்ந்து நடித்து வருகிறார்கள் அதிலும் ஒருசில குழந்தைகள் பட வாய்ப்பு கிடைக்காமல் அப்படியே கிளம்பி விடுகிறார்கள்.
ஏவிஎம் புரோடக்சனில் உருவான உறவுக்கு கைகொடுப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமான குழந்தைதான் யுவினா இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் சூர்யா ஆகியவருடன் இணைந்து நடித்துள்ளார் தமிழ் சினிமாவில் முதன்முதலாக 2013 ஆம் ஆண்டு வெளியாகிய இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் தான் வீரம் இந்த திரைப்படத்திலும் அஜித்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார். மஞ்சப்பை, காக்கி சட்டை, மாஸ் என்கின்ற மாசிலாமணி, ஸ்ட்ராபெரி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் கடைசியாக இவர் விஜயின் சர்க்கார் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார் இந்த நிலையில் இவர் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் இவர் வெளியிடும் புகைப்படத்தை காண ரசிகர்கள் பலரும் ஏங்குவார்கள் ஏனென்றால் இவர் ஹீரோயின்களை விட மிஞ்சும் அளவிற்கு அழகில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வீரம் திரைப்படத்தில் நடித்த குட்டி குழந்தையா இப்படி ஹீரோயின் மாதிரி போஸ் கொடுப்பது என ஆச்சிரியத்துடன் புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.