பொறுத்தது போதும் பொங்கி எழு என வலிமை அப்டேட்டை அதிகாரபூர்வமாக அறிவித்த போனிகபூர்.! போடுடா மாலைய கொளுத்துடா வெடிய

ajith valimai

அஜித் விசுவாசம், நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை இயக்கிய வினோத் தான் இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.

ஆனால் இதுவரை வலிமை திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகமல்  இருப்பதால் ரசிகர்கள் அப்டேட் கேட்டு தயாரிப்பாளர்களையும் நடிகர் நடிகைகளையும் தொல்லை பண்ணி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் வலிமை அப்டேட் யார் யாரிடம் கேட்க வேண்டும் என்று பார்க்காமல் அனைவரிடமும் கேட்டு வந்தார்கள். இந்தநிலையில் அஜித் தரப்பிலிருந்து வலிமை அப்டேட் விரைவில் வெளியாகும் அதுவரை நீங்கள் பொறுமை காக்க வேண்டும் என வெளியானது.

ajith-valimai5
ajith-valimai5

இந்த நிலையில்  சற்று முன்பு வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை அப்டேட் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். அவர் அந்த அறிக்கையில் கூறியதாவது அஜித் பிறந்தநாளில் மே 1-ம் தேதி அஜித்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் சமூக வளைதளத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.