தமிழ் திரையுலகில் வசூல் மன்னனாகவும் சாதனை நாயகனாகவும் வலம் வருபவர் தல அஜித் இவர் நடிப்பது மட்டுமல்லாமல் கேமரா, சமையல், கார் ரேஸ், பைக் ரேஸ் என பலவற்றில் அதிக ஆர்வம் உடையவர். அதுமட்டுமில்லாமல் துப்பாக்கி சுடுதல் ஆளில்லா விமானங்களை இயக்குதல் என பல திறமைகளை வைத்துள்ளார்
இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தலைமை ஆளில்லா விமானம் இயக்கும் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார் தல அஜித். தல அஜித் அவர்களுக்கு கடைசியாக வெளியாகிய விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இதில் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை போனிகபூர் தான் தயாரித்திருந்தார். அதேபோல் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை எச் வினோத் அவர்கள் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படமான வலிமை திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார் தற்பொழுது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் இந்த திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது.
மேலும் வலிமை திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா அஜித்திற்கு வில்லனாக நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் ஹீமா குரோஷி அஜித்திற்கு நாயகியாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தில் குக் வித் கோமாளி புகழ், யோகி பாபு, ராஜ் ஐயப்பா, சுமித்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ரஷ்யா சென்று வந்தார்கள் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித் ரஷ்யாவில் ஒரு பைக் ரைட் சென்றுள்ளதாக கூறப்படுகிறது அதன் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது இந்த நிலையில் ரஷ்யா படப்பிடிப்பில் இருந்து சில சூட்டிங்க் ஸ்பார்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது இதில் தல அஜித் செம கெத்தாக வலம் வருகிறார்.