தயாரிப்பாளர் போனி கபூர் மீது தல அஜித் ரசிகர்கள் ஒரு சில காலமாகவே கோபமாக இருக்கிறார்கள். ஏனென்றால் தல அஜித் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்காக ஐதராபாத்தில் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது
இந்நிலையில் அந்த திரைப்படத்திலி ருந்து எந்த ஒரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு தரவில்லை. எனவே ரசிகர்கள் போனி கபூரை வைத்து போஸ்டர் அடித்து அப்டேட் கொடு என ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் ட்விட்டரில் போனி கபூரை தல அஜித் ரசிகர்கள் டார்கெட் செய்து கேள்வி கேட்டும் வருகிறார்கள்.
இந்நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக பல நடிகர், நடிகைகளின் புதிதாக நடிக்கப்போகும் படத்தைப் பற்றி தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் வலிமை திரைப்படத்தைப் பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை.
இந்நிலையில் வலிமை திரைப்படத்திலிருந்து தல அஜித்தின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் அஜித் ஸ்மார்ட்டாக இருக்கிறார் என்பதும் தெரியவருகிறது.
தற்பொழுது தல அஜித்தின் புகைப்படம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.