போனி கபூரின் அதிரடி வலிமை அப்டேட்டால் அதிர்ச்சியான அஜித் ரசிகர்கள்.!

ajith-in-valimai
ajith-in-valimai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்த வருபவர் தல அஜித்.இவர் நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் ஒரு வருட காலங்களாக எந்த திரைப்படங்களும் வெளிவராத காரணத்தினால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இவர் பல மாதங்களாக வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் வலிமை திரைப்படத்தைப் பற்றிய எந்த அப்டேட்டும் வராத காரணத்தினால் ரசிகர்கள் போகுமிடமெல்லாம் வலிமை அப்டேட் கொடுங்கள் என்று கேட்பதை தொடர்ந்து செய்து வந்தார்கள். பிறகு ஹிமா குரோஷ்ஷி நான் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இத்திரைப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் ஆக்ஷன் காட்சிகளை வெளிநாட்டுக்கு சென்று எடுக்க உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தை ஹஜ் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1ஆம் தேதி தல அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக மே 1ஆம் தேதி வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவராது என்று கூறி உள்ளார்கள். இதனை அறிந்த ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளார்கள். இந்த தகவல் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.