தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்கிற்கு வந்தால் முதல் நாள் முதல் காட்சி வெளியானதும் திரையரங்குகள் கொள்ளை கூடாரங்களாக மாறிவிடும். பொதுவாக முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி தனக்கு பிடித்த நடிகர்களின் படத்தை பார்க்க ஆவலாக இருப்பார்கள் அந்த ஆர்வத்தை காசாக மாற்றி வருகிறது திரையரங்க முதலைகள்.
சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித் நடித்த வலிமை திரைப்படம் திரையரங்கிற்கு வந்துள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் வலிமையை காண எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் இன்று அதிகாலை ரசிகர்களின் காட்சி அதனால் ரசிகர் மன்றங்களுக்கு டிக்கெட்டுகள் அனைத்தும் கொடுக்கப்பட்டன இதில் இரண்டு வகையான கொள்கைகள் நடந்துள்ளது.
திரையரங்க உரிமையாளர்கள் சராசரியாக ஒரு டிக்கெட் விலை 300 ரூபாய் என மொத்த டிக்கெட்டுகளையும் ரசிகர்களின் அதாவது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அளித்துள்ளார்கள் இந்த நிர்வாகிகள் ரசிகர்களுக்கு 500 முதல் 1,500 ரூபாய் டிக்கெட் விலையை வைத்து விற்றுள்ளார்கள்.இந்த திரையரங்கு காட்சிகளுக்கான திரையிடலில் நடந்த கொள்ளை அஜித் மன்றங்களை கலைத்த பிறகும் இன்னும் தொடர்ந்து வருகிறது.
இதற்கு அஜித் ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும் சிறப்புக் காட்சிகளுக்கு பிறகு நடக்கும் காட்சிகளில் மொத்த கட்டணம் கொள்ளையும் திரையரங்ககளையே சேரும் தமிழகத்திலுள்ள 99% திரையரங்குகள் வலிமை படத்துக்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது.
அரசு நிர்ணயித்த 150 ரூபாய் டிக்கெட் விலை என்றால் இவர்கள் இருமடங்காக 300 ரூபாயை வைத்து டிக்கெட்டுகளை விற்று வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் அரசு முத்திரை இல்லாத டிக்கெட்டுகள் திரையரங்குகளில் கொடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் பல சட்ட மீறல்களும் நடந்துள்ளது. இதற்கு ஏதாவது ஒரு வழியைக் கொண்டு வர வேண்டும் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.